
உலகின் முதல் மெய்நிகர் தமிழ்ப் பள்ளி

தமிழ் மொழியால் இணைந்திருப்போம்

உலகெங்கும் வாழ்ந்தாலும் தமிழால் இணைத்திருக்கும் எங்கள் மாணவர்கள்

உயிரினும் மேலான எம் தாய்மொழி

பள்ளியின் காட்சி அரங்கம்

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய இராச்சியம்

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா
உலகளாவிய தமிழ்ப் பள்ளிக்கு வரவேற்கிறோம்
உலகளாவிய தமிழ் பள்ளியில், மொழி என்பது கலாச்சாரத்திற்கான வாசல் என்று நாங்கள் நம்புகிறோம். எமது நோக்கம் தமிழ் மொழியில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதோடு, நமது கலாச்சரம் மற்றும் பண்பாட்டை போற்றிப் பாதுகாத்து அதை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதாகும்.
- தரப்படுத்தப்பட்ட உலகளாவிய பாடத்திட்டம்
- அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்
- எல்லைகளில்லா கற்றல் அனுபவம்
தமிழ் மொழி
தாய்மொழியின் இனிமையும் ஆழமும் அனைத்துநிலைகளுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் மூலம் கற்றிடலாம். அடிப்படை வாசிப்பு, எழுத்து திறன்களிலிருந்து மேம்பட்ட புரிதல் வரை, மாணவர்கள் வலுவான மொழித்திறனை வளர்த்துக் கொள்ளவும் தமிழின் மீது ஆழ்ந்த பற்றை உருவாக்கவும் வழிகாட்டுகிறோம்.
கலை மற்றும் பண்பாடு
தமிழ் பாரம்பரியத்தின் செழுமையை அதன் பண்பாடு, இலக்கியம் மற்றும் நிகழ்கலைகள் வழியாக அனுபவிக்கலாம். இசை, கதைப்பாடல் மற்றும் பல்வேறு பண்பாட்டு செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் தங்கள் வேர்களுடன் இணைவதை ஊக்குவிக்கிறோம்.
தமிழ்ச் சமூகம்
தமிழ் கற்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணையும் உற்சாகமான சமூகத்தின் ஒரு பகுதியாகுங்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வளரவும், தங்கள் திறமைகளை பகிரவும், தங்கள் பண்பாட்டு அடையாளத்தை கொண்டாடவும் ஆதரவான சூழலை உருவாக்குகிறோம்.
கற்றல் சாதனங்கள்
எங்கள் ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் பயணத்தைச் சிறப்பாக்கும் விதமாக ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு கற்றல் வளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த வளங்கள், பாடத்திட்ட அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, தமிழ் இலக்கண விதிமுறைகளை உள்ளடக்கியது. இவை மாணவர்களுக்குத் தமிழ் மொழியை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

Teaching materials and resources

Students work display

Books and learning materials

Students writing session

Students writing session
பள்ளியின் நிகழ்ச்சிகள்
உலகளாவிய தமிழ் பள்ளி, தமிழ்மொழி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துகிறது. சமீபத்திய நிகழ்ச்சி விவரங்களைக் கீழே காணலாம்.








































எங்கள் செயல்பாடுகள்
தமிழ்மொழி மட்டுமின்றி மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்க்கிறோம்.

ஓவியம், இசை & நடன வகுப்புகள்
தகுதியுள்ள ஆசிரியர்களிடமிருந்து, பாரம்பரிய இசை, பாரதநாட்டியம் மற்றும் சதுரங்க வகுப்புகளை வழங்குகிறோம்.
மேலும் அறிய →
நேரடி மேடை நிகழ்ச்சிகள்
மேடை நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களின் பன்முகத்திறன்களை எடுத்துக்காட்டும் வாய்ப்பை வழங்குகிறோம்.
மேலும் அறிய →
தமிழ் வீரக்கலை வகுப்புகள்
தமிழரின் வீரக்கலைகளான சிலம்பம், களரி அடிமுறை, வாள் சண்டை பயிற்சிகளை தகுந்த பாடத்திட்டத்தோடு வழங்குகிறோம்.
மேலும் அறிய →மாணவர் சேர்க்கை
மாணவர்களின் வயது மற்றும் அவர்கள் வசிக்கும் நாடுகளின் நேர மண்டலங்களுக்கு ஏற்ப வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் எளிதாகவும் வசதியாகவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறலாம். எங்களின் பல்வேறு சிறப்பான பாடநெறிகளில் இணைந்து, பயனுள்ள மற்றும் மகிழ்ச்சியான கல்விப் பயணத்தைத் தொடங்குங்கள். தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடனும், தரநிலைப்படுத்தப்பட்ட மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கற்றல் வளங்களின் உதவியுடனும், மாணவர்கள் வெற்றியை நோக்கி உயர்தரமான கல்வியைப் பெறுகின்றனர்.
